திகார் சிறையில் தியான பயிற்சி மேற்கொள்ளும் கனிமொழி

Image Unavailable

 

புது டெல்லி, நவ.11 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவரின் மகளும், எம்.பி.யுமான கனிமொழி சிறையில் தியான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருவதால் மனமுடைந்த கனிமொழி, தியானம் மற்றும் ஆத்ம ஆன்மீக சிந்தனை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். கடைசி முறையாக ஜாமீன் மறுக்கப்பட்ட போது அவரது தாயார் ராஜாத்தி அம்மாளை கட்டிப்பிடித்து கதறி அழுதார். ராஜாத்தியும் அழுதார். 

சிறைக்கு தன்னை பார்க்க வந்த அண்ணன் ஸ்டாலினிடமும் கண்ணீர் வடித்துள்ளார் கனிமொழி. இந்த சோகமான சூழ்நிலையில் தனது மனத்தை ஒருமுகப்படுத்த அவர் தியானப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொண்டு நிறுவனமான திவ்யஜோதி சாக்ரதி சன்ஸ்தன் என்ற அமைப்பு கைதிகளுக்கு ஒழுக்க நெறி, ஆன்மீகம், தியாக சிந்தனைகள் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இது தொடர்பான புத்தகங்களையும் அது கைதிகளுக்கு வழங்குகிறது. அதில்தான் கனிமொழியும் ஆர்வத்துடன் ஈடுபட்டு பயிற்சி பெற்று வருவதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ