முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு திருமணம்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.11 - இந்திய கிரிக்கெட் அணியில் சுழல் பந்து வீச்சாளராக இடம் பெற்றிருப்பவர் அஸ்வின்குமார். இவர் முதல் டெஸ்டிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி கதாநாயகனாக திகழ்ந்தார். அதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு வரும் 13 ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் திருமணம் நடக்கவுள்ளது. மணமகள் பெயர் பிரீத்தி. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள். திருமணத்திற்காக அஸ்வின் ஒரு சிறிய இடைவேளை மட்டுமே எடுத்துள்ளார். வரும் 14 ம் தேதி நடைபெறும் கொல்கத்தா 2 வது டெஸ்டில் பங்கேற்க அவர் சென்று விடுவார். முதல் டெஸ்டில் பெற்ற விருதை தனது வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக வழங்கப் போவதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!