முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15-வது வார்டு அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,நவ.11 - மதுரை மாநகராட்சி 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நடந்து முடிந்த மதுரை மாநகராட்சி தேர்தலின் போது 15 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ஜெயமணி தேர்தல் பிரச்சாரத்தின் போது மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையம் மதுரை மாநகராட்சி 15 வது வார்டுக்கு தேர்தலை அறிவித்தது. இந்த வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளராக எஸ்.பி.ஜெயமணியின் மனைவி ஜெயலட்சுமியை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

   இதன் படி 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயலட்சுமி நேற்று தனது வேட்பு மனுவை மதுரை மேற்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.ஆர்.சாமியிடம் தாக்கல் செய்தார். இந்த மனு தாக்கலின் போது மேயர் ராஜன்செல்லப்பா, மாநகர் மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், பகுதி கழக செயலாளர் ஜெயபால், மத்திய தொகுதி கழக இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, வட்ட செயலாளர் வெங்கிடு, கவுன்சிலர் கார்னர் பாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

   மனு தாக்கலுக்கு பின்னர் அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி கூறுகையில், எனது தந்தை, எனது கணவர் இதே வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்துள்ளனர். என்னை தற்போது அதிமுக வேட்பாளராக முதல்வர் அம்மா அறிவித்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வார்டில் நான் கவுன்சிலராக வெற்றி பெற்றவுடன் எனது கணவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று தெரிவித்தார். வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு ஜெயபிரபா என்ற மகளும், ஜெயபிரபு, ஜெயக்குமார் என்ற மகன்களும் உள்ளனர். 49 வயதுடைய வேட்பாளர் ஜெயலட்சுமி பியூசி வரை படித்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!