ஜெகன் மோகனுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

Image Unavailable

 

ஐதராபாத், நவ. - 12 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ளது.  அன்னிய செலாவனி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெகன் மோகன் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜெகன் சார்பாக பதிலளிக்க உரிய  வணங்களுடன் அதிகாரபூர்வ நபரை அனுப்பி வைக்குமாறு கூறி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 28 ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள தலைமையகத்துக்கு வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி பரிவர்த்தனைகளிலும், முதலீடுகளிலும் ஈடுபட்ட போது அன்னிய செலாவனி விதிகளை மீறியதாக ஜெகன் மோகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜெகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்திய சில தினங்களில் அமலாக்கப் பிரிவும் சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இரும்பு சுரங்க முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அவரை சமீபத்தில் விசாரித்தது. அவருக்கும், கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஜெகனுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களுக்கு முதலீடுகள் வந்த வழியை அமலாக்கப் பிரிவு விசாரிக்க தொடங்கியவுடன் சி.பி.ஐ. இந்த வழக்கை பதிவு செய்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ