Idhayam Matrimony

இந்திய -இலங்கை மீனவர் கூட்டுக்குழு மன்மோகன்சிங் - ராஜபக்சே முடிவு

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

அட்டூ, நவ.- 12 - இந்திய மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் கூட்டுக்குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.  17-வது சார்க் உச்சிமாநாடு மாலத்தீவின் அட்டூ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் இலங்கை அதிபர் ராஜ பக்சேவும் சந்தித்து இருநாட்டு பிரச்சனைகள் குறித்து பேசினர். அப்போது தமிழக மீனவர்கள் மீது கடலில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது பற்றியும், கடல் பகுதியில் வன்முறைகளை தடுப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் இலங்கை முகாம்களில் தமிழர்களை மறுகுடியமர்த்துவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் ராஜபக்சேவை மன்மோகன்சிங் வலியுறுத்தினார்.   இதற்கு பதிலளித்த ராஜபக்சே, இலங்கை முகாம்களில் தற்போது 7000 தமிழர்கள்தான் உள்ளனர். அவர்களும் விரைவில் மறுகுடியமர்த்தப்படுவார்கள் என்றார். இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை நீடித்தது. மன்மோகன்சிங் மற்றும் ராஜபக்சே ஆகியோரின் பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாய் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் பிரச்சனையை கவனிக்க,  இரு நாடுகளின் மீனவர் கூட்டுக் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி முதல்கட்டமாக இந்திய - இலங்கை மீனவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வழி வகுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்