முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

32 மாவட்டங்களில் வனத்துறை அலுவலர்களுடன் -பச்சைமால் ஆலோசனை

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 12 - 32 மாவட்டங்களில் 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முனைப்புடன் மேற்கொள்ள வனத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பச்சைமால் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு வனத்துறையில் உள்ள மண்டல அளவிலான அலுவலர்களின் கலந்தாய்வு கூட்டம் தமிழக வனத்துறை அமைச்சரால் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின காப்பாளர், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வனப்பாதுகாவலர்கள், புலிகள் காப்பக கள இயக்குநர்கள், இயக்குநர், அறிஞர் அண்ணா உயிரியல் nullங்கா மற்றும் மண்டல வனப்பாதுகாவலர்கள் ஆகிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வனத்துறை மானியக்கோரிக்கையின் போது வனத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின்படி செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை கேட்டறிந்ததுடன், அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை முனைப்புடன் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு வனத்துறை அலுவலர்களை  அமைச்சர் கேட்டுக்கொண்டார்.  குறிப்பாக, தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையினை அதிகரிக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் மாநிலத்தின் 32 மாவட்டங்களில் 64 லட்சம் மரக்கன்றுகள் நடவுள்ள மாபெரும் மரம் நடும் திட்டத்திற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் அத்திட்டப் பணிகளை சிறப்புற மேற்கொள்ள அறிவுறுத்தினார்.மேலும்,  வனத்துறை அமைச்சர்  பல்வேறு மாவட்டங்களில் வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்புப் பணிகள் மற்றும் வன வளர்ச்சிப் பணிகளை முழு ஆர்வத்துடன் மேற்கொள்ளவும், வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் வன உயிரினங்களால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்