முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டிவனம் கோர்ட்டில் அமைச்சர் கல்யாணசுந்தரம் நேற்று ஆஜராகவில்லை

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.- 12 - திண்டிவனம் கோர்ட்டில் புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம் நேற்று ஆஜர் ஆகவில்லை. இதையொட்டி வருகிற 25-ந் தேதி அவர் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஜகோர்ட்டு கடந்த 8-ந் தேதி தள்ளுபடி செய்தது.  இதையடுத்து அமைச்சர் கல்யாணசுந்தரத்தை கைது செய்ய தமிழக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனாலும் தலைமறைவாக இருக்கும் அமைச்சர் கல்யாணசுந்தரத்தை தமிழக போலீசாரால் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் 5 தனிப்படை போலீசார் புதுவையில் முகாமிட்டு தேடி வருகின்றனர். அமைச்சர்களின் வீடு, சட்டமன்ற உறுப்பினர்களின் வீடு, உறவினர்களின் வீடு, சட்டமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகள் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது.  கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அமைச்சர் கல்யாணசுந்தரம் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளதாக தெரிகிறது. சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய குறைந்த பட்சம் ஒருவாரம் ஆகும் என்று தெரிகிறது. இதற்கிடையே கல்யாணசுந்தரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தமிழக போலீசார் திண்டிவனம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் அவர் 11-ந் தேதி ஆஜர் ஆக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.  ஆ னால் அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. அவருக்கு பதிலாக திண்டிவனம் கோர்ட்டில் அவரது சார்பில் வக்கீல் ஜெகதீசன் ஆஜர் ஆனார். அமைச்சர் கல்யாணசுந்தரம் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றிருப்பதால் அவர் ஆஜர் ஆக முடியவில்லை என்று குறிப்பிட்டு அவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.  ஆனால் அமைச்சர் கல்யாணசுந்தரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை ஜகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரை கைது செய்ய விழுப்புரம் போலீசார் தீவிரமாக உள்ளனர் என்று அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.  மாஜிஸ்திரேட்டு பிரகாஷ் இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் அமைச்சர் கல்யாணசுந்தரம் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!