முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனித்தெலுங்கானா விவகாரம்: ஆந்திர அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி, நவ. 13-  தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த வழக்கில் பதிலளிக்குமாறு ஆந்திர அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  ஆந்திர பிரதேசத்தில் வழக்கறிஞராக உள்ள பி.வி. கிருஷ்ணய்யா, மத்திய அரசு ஆந்திரத்தை பிரித்து புது மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  கடந்த ஒரு வருட காலமாக தனி மாநில கோரிக்கையை முன்வைத்து நடந்து வரும் போராட்டத்தால் அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. சாலை மறியல், ரயில் மறியல் என்று தொடர்ந்து நடைபெற்று வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் போராட்டத்தில் கலந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.  ஐகோர்ட்டை தவிர மற்ற நீதிமன்றங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு வரி பணமும் வீணடிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஆந்திர அரசு தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி, ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல், ஆந்திர பார்கவுன்சில் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ். முகோபாத்யயா அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!