முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதம் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் பொதுவான சவால் - மன்மோகன் சிங்

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மாலே. நவ. 13. தீவிரவாதம் என்பது இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் பொதுவான சவாலாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். மாலத்தீவில் நடந்த தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அந்நாட்டின் தலைநகர் மாலேயில் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். தீவிரவாதம் என்பது இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் பொதுவான ஒரு சவாலாக இருக்கிறது என்றும்  இந்த சவாலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் சிங் கேட்டுக்கொண்டார். இநதியாவில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களை  போல்தான் மாலத்தீவிலும் நடக்கின்றன என்றும் அவர் கூறினார். நமது இரு தேசங்களும் எதிர்கொள்ளும் சவால்கள்  பற்றி எல்லோருக்கும் தெரியும். பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், கடற்கொள்ளை, ஆட்கடத்தல், போதை பொருள் கடத்தல் போன்ற சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார். 75 எம்.பி.க்களை கொண்ட மாலத்தீவு பாராளுமன்றத்தில்  அந்நாட்டு ஜனாதிபதி  முகம்மது நஷீத்தும் பங்கேற்றார்.  பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றிய போது  முக்கியமான கட்டங்களில் மாலத்தீவு எம்.பி.க்கள் கரகோஷம் எழுப்பினர். சவாலாக இருக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள  இரு நாடுகளும் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளன என்றும் தேசிய போலீஸ் கல்லூரி  அமைக்க இரு நாடுகளும் துணை புரியம் என்றும் அவர் கூறினார். தீவிரவாதம்,  போதை பொருள் கடத்தல், பேரி டர் மேலாண்மை, கடலோர பாதுகாப்பு, கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளுதல் போன்ற விஷயங்களில் இரு நாடுகளும் ஒன்றுடன்  ஒன்று துணையாக இருந்து   செயல்படும் என்றும் மன்மோகன் சிங் கூறினார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். பருவ நிலை மாற்றத்தால் மாலத்தீவிற்கு ஏற்படும் பாதிப்புக்களை சரி செய்ய இந்தியா உதவி  செய்யும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்