முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் விபத்தில் மெக்சிகோ நாட்டின் மந்திரி பலி

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

மெக்சிகோசிட்டி. நவ. 13. ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் மெக்சிகோ நாட்டின் உள்துறை அமைச்சர் மரணம் அடைந்தார். மெக்சிகோ தலைநகர் மெ க்சிகோ சிட்டியிலிருந்து தென் பகுதியில் உள்ள குயர்நவகா என்ற நகரில் நீதிபதிகள் சங்கத்தின்  கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மெக்சிகோ உள்துறை அமைச்சர்  பிரான்சிஸ்கோ பிளேக் மோராவும் மற்றும் பல அதிகாரிகளும்  ஒரு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். அந்த ஹெலிகாப்டர்  தரையிறங்கிய போது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால்  குறிப்பிட்ட இடத்தில் அந்த ஹெலிகாப்டரை  தரையிறக்க முடியாமல் விமானி தடுமாறியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது.  இதில்  மெக்சிகோ உள்துறை அமைச்சர் பிளேக் மோராவும் மேலும் 7 பேரும்  அதே இடத்தில் பலியானதாக கூறப்படுகிறது.  இந்த தகவலை மெக்சிகோ அரசாங்க செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். பிளேக் மோராவுக்கு வயது 45.  இவர் தொழில் ரீதியாக ஒரு வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்து விட்டதாகவும்  அதில் பயணம்  செய்தவர்கள் அனைவருமே பலியாகி விட்டார்கள் என்றும்  அரசாங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.இந்த விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்து பூர்வாங்க விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு 2008 ல் கூட மெக்சிகோ உள்துறை அமைச்சர்  ஜோஸ் கேமிலோ  மவுரினோ என்பவரும் கூட இதே போல ஒரு விமான விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று முன்தினம் நடந்த சம்பவம் ஒரு விபத்துதான் என்றும் இதில் நாசவேலைக்கு வாய்ப்பு இல்லை என்றும்  மெக்சிகோ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்