முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேங்கிய மழை நீர் வெளியேற்றம் முத்துராமலிங்கம் அதிரடி நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், நவ. - 13  - திருமங்கலம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடந்த மழை நீரை வெளி யேற்றிட முத்தராமலிங்கம் எம்.எல்.ஏ. மேற்கொண்ட அதிரடி நடவடி க்கைகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.  திருமங்கலம் அருகே கூடக்கோவில் செல்லும் வழியான மேலக் கோ   ட்டையில் தண்டவாளத்திற்கு கீழே வாகனங்கள் செல்வதற்காக ரயில் வே சுரங்கப்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.  ஆனால் முறையாக கட்டப்படாததால், மழைகாலங்களில் இந்த ரயி ல்வே சுரங்கப் பாதையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டு பொதுமக் கள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றிச் சென்று சாஸ்திரிபுரம் ஆளில்லாத ரயில்வே கேட்டை ஆபத்தான முறையில், பெரும் சிரமங்களுக்கு இடையே கடந்து சென்றனர்.  தற்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போ து, மழைநீர் தேங்கியதால் மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப் பாதை வழக்கம் போல குளமாக மாறி போக்குவரத்திற்கும், பொது மகக்க ளுக்கும் இடையூறாக மாறியது.  இது பற்றி தகவலறிந்த முத்துராமலிங்கம் எம்.எல். ஏ. மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப் பாதைக்கு, அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளா  ட்சி பிரதிநிதிகளுடன் விரைந்து வந்து நேரில், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது, ரயில்வே சுரங்கப் பாதையில், 4 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுரங்கப் பாதையி ல் தேங்கியிருக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.  அதன் பேரில் மோட்டார் பம்ப் செட் கொண்டுவரப்பட்டு அங்கு தே ங்கி இருந்த தண்ணீர் அகற்றப்பட்டது. இதில் ஜே.சி.பி. எந்திரமும் பய ன்படுத்தப்பட்டது. 5 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு தண்ணீர் அகற்றப்பட்டது. போக்கு வரத்து மீண்டும் துவங்கியது.   
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago