முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.ஆர்.காங்கிரசின் சனிமூலை செண்டிமெண்ட் தகர்ந்தது

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.14- 5 மாதம் மட்டுமே கல்யாணசுந்தரம் பதவியில் இருந்ததின் மூலம் சனிமூலை செண்டிமெண்ட் தகர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் புதுவை சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து மே மாதம் 16-ந் தேதி ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 

இதில் 2-வது அமைச்சராக கல்யாணசுந்தரம் பதவி ஏற்றார். சீனியர்கள் பலர் இருக்க ரங்கசாமிக்கு அடுத்த படியாக 2-வது இடம் கல்யாணசுந்தரத்திற்கு அளிக்கப்பட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கை உள்ள ரங்கசாமி, புதுவையில்ஹ சனிமூலை பகுதியாக காலாப்பட்டு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கல்யாணசுந்தரத்திற்கு இந்த பதவியை அளித்தார் என்றும் கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தம் வகையில் சட்டமன்றத்தில், அமைச்சர் கல்யாணசுந்தரம் சனிமூலையான காலாப்பட்டு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். அந்த அடிப்படையிலேயே எனக்கு அமைச்சர் பதவி கிடைத்ததாக பெருமையுடன் கூறினார். 

ஆனால் சனிமூலை செண்டிமெண்டால் பதவிக்கு வந்த கல்யாணசுந்தரத்தால் 5 மாதம் மட்டுமே பதவியில்  நீடிக்க முடிந்தது. பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கு பதிவான பின் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்யும் படி முதல்வர் ரங்கசாமி கேட்டுக் கொண்டார். ஆனால் இறுதியில் மத்திய அரசின் நெருக்கடி முற்றிய நிலையில் தலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரத்தை முதல்வர் ரங்கசாமியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனாலே அமைச்சர் கல்யாணசுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி தனது அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளார். 

மேலும் இத்தகைய கடும் நடவடிக்கையால் ஆளும் என்.ஆர்.காங்கிரசின் ஆதரவு இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்