முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.14-​ முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் கலெக்டர்கள் மாநாடு நேற்று துவங்கியது. இதில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித்திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது, சட்டம்​ஒழுங்கை நிலைநாட்டுவது ஆகியவற்றில் கலெக்டர்களும், போலீசாரும் முக்கிய பங்குவகிக்கிறார்கள். இவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்காக கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல் தடவையாக கலெக்டர்கள் மாநாடு சென்னை கோட்டையில் உள்ள  நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்றும், இன்றும் நடக்கிறது. முதல் நாள் மாநாடு நேற்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. இதில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு முதல்வர்  ஜெயலலிதா தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத்சாரங்கி வரவேற்றார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது எப்படி என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார். திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா?  சட்டம் ​ ஒழுங்கை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதுவரை நடந்த வெள்ள நிவாரண பணிகள், தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள், உரவினியோகம், மின்சார பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை, நில அபகரிப்பு வழக்குகள், புதிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து விவாதம் நடைபெறுகிறது. அப்போது முதல்வர்  ஜெயலலிதா தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார். இன்றும்  2​வது நாளாக கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது. இன்று பிற்பகல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. கலெக்டர்கள் மாநாடு நடைபெறுவதையொட்டி, சென்னை கோட்டை மற்றும் மாநாடு நடைபெறும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10​வது மாடி உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்