முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ரங்கசாமி அரசை கண்டித்து எம்.எல்.ஏ. திடீர் உண்ணாவிரதம்

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.14- புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் பிரான்ஸ்திப்பா பகுதியை சேர்ந்தவர் தேவுசக்திபாபு(26). இவர் திருட்டு வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏனாம் போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். 

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஏனாம் போலீஸ் நிலையத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் தேவுசக்திபாபு இறந்து கிடந்தார்.  இதையடுத்து அவரின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தேவுசக்திபாபு இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

இதற்கிடையே தேவுசக்திபாபுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தொடர்ந்த நடந்த இறுதி ஊர்வலத்தின் போது தேவுசக்திபாபுவின் உறவினர்கள் தேவுசக்திபாபுவின் உடலை ஏனாம் போலீஸ் நிலையத்தின் முன்பும், மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகத்தின் முன்பும் ரோட்டில் வைத்து மறியல் நடத்தினர். 

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மறியல் நடத்தியவர்களை கலைத்தனர். இதற்கிடையே ஏனாம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.  இதற்கான உத்தரவை மண்டல நிர்வாக அதிகாரி ஜவகர் பிறப்பித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் டிஜஜி சர்மா நேற்று காலை ஏனாம் சென்றார். அவர் தேவுசக்திபாபுவின் மனைவி சந்திரகலா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.  இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டை கண்டித்து மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ. மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்