முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, நவ.14-​ மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திடீர் உடல் நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் நலம் விசாரித்தார். இது குறித்த விபரம் வருமாறு:- மத்திய மந்திரி ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் தங்கி இருந்தார். இரவு 10.30 மணியளவில் அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானது. இதை தொடர்ந்து அவர் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின் உடல் நிலை சீரானது. இன்று காலையில் அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஜி.கே.வாசன் உடல் நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஜி.கே.வாசன் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நலம் விசாரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்