முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிரண்டுபோய் இருக்கிறார் மாயாவதி: திக்விஜய்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.15 - காங்கிரஸ் கட்சியைக் கண்டு உ.பி. முதல்வர் மாயாவதி மிரண்டுபோய் இருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் காட்டமாக தாக்கிப் பேசியுள்ளார். உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி சமீபத்தில் திக்விஜய் சிங் பற்றி ஒரு கருத்தை கூறியுள்ளார். உத்தரபிரதேச முதல்வர் ஆவதற்கு திக்விஜய் சிங் துடித்துக்கொண்டு இருக்கிறார் என்று மாயாவதி குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் திக்விஜய்சிங் நேற்று மாயாவதியைப் பற்றி ஒரு கருத்தை கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் எனக்கு ஓட்டே இல்லை. அப்படி இருக்கும்போது நான் உ.பி. முதல்வர் ஆவதற்கு துடித்துக்கொண்டு இருப்பதாக மாயாவதி கூறியிருப்பது அவரது மிரட்சியையே காட்டுகிறது. அவர் காங்கிரஸ் கட்சியைக் கண்டு கலக்கமடைந்துள்ளார் என்பதையும் அவரது கருத்து வெளிப்படுத்துகிறது என்று திக்விஜய்சிங் கூறியுள்ளார். இந்த கருத்தை ட்விட்டர் இணையதளத்தில் அவர் தெரிவித்திருக்கிறார். 

சமீபத்தில் லக்னோவில் நடந்த ஒரு கூட்டத்தில் மாயாவதி பேசினார். அப்போது திக்விஜய்சிங்கை உ.பி. முதல்வராக்க காங்கிரஸ் கட்சியும், ராஜ்நாத்சிங்கை உ.பி.  முதல்வராக்க பி.ஜே.பி.யும் திட்டமிட்டுள்ளன என்று அவர் கூறியிருந்தார். இந்த இரு கட்சிகளும் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களை முதல்வராக்க திட்டமிட்டு வருகின்றன. இதில் இந்த இரு கட்சிகளும் வெற்றிபெறப் போவதில்லை என்றும் மாயாவதி குறிப்பிட்டிருந்தார். திக்விஜய்சிங் தற்போது உத்தரபிரதேச காங்கிரஸ் விவகாரங்களை கவனித்து வருகிறார். 

உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அடுத்த இரண்டு மாதங்களில் பேரணிகள் நடத்தப்படும் என்றும் திக்விஜய்சிங் கூறினார். உத்தரபிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் திக்விஜய்சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago