முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசா மனைவி பரமேஸ்வரியிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய முடிவு

புதன்கிழமை, 9 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

சென்னை, மார்ச்.10 - ஸ்பெக்ட்ராம் ஊழல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் ஆ.ராசா மனைவி பரமேஸ்வரியிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து விபரம்:- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறை கேடுகளால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது தொடர்பாக வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக இதுவரை ஆ.ராசா, சித்தார்த், சந்தோலியா, பல்வா ஆகிய 4 பேர் கைதாகி உள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. வருகிற 31​ந்தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் பண பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ.யுடன் இணைந்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் பரமேஸ்வரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் பரமேஸ்வரியிடம் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். அப்போது கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன நிர்வாகிகள் சிலரும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கிரீன் ஹவுஸ் புர மோட்டர்ஸ் நிறுவனத்தில் பரமேஸ்வரியும் ஒரு இயக்குனராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆன பிறகு கிரீன்ஹவுஸ் நிறுவனத்தில் நிறைய பணம் முதலீடு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இயக்குனராக பதவி ஏற்ற சுமார் ஓராண்டு கழித்து பரமேஸ்வரி அந்த பதவியில் இருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை, ராசாவின் உறவினர் மலர் விழிக்கு பரமேஸ்வரி மாற்றி கொடுத்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடந்த பண பரிமாற்றங்கள் தொடர்பாகவே பரமேஸ் வரியிடம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கேள்வி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விசாரணையின் போது பரமேஸ்வரியின் வங்கி கணக்குகளையும் சி.பி.ஐ. ஆய்வு செய்ய உள்ளது. கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் சாதிக் பாட்சாவிடம் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது. அவர் கூறி உள்ள சில தகவல்களை பரமேஸ்வரியிடம் விசாரித்து ஒப்பிட்டுப்பார்க்கவும் சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுமார் 20 பேர் மீது சி.பி.ஐ. பிடி இறுகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago