எனது தந்தையை குற்றவாளியாக்க சதி: ஜெகன் மோகன்

Image Unavailable

நகரி, நவ18 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் யாத்திரை நடத்தி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, எனது தந்தை ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் ஏழை மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏழை விவசாயிகளுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அவரது ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பலனடைந்து வந்தனர். இதனால்தான் அவரை ஆந்திர மக்கள் தெய்வமாக கொண்டாடுகின்றனர். அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அவரை குற்றவாளியாக்க சி.பி.ஐ. அதிகாரிகள் சதி செய்கிறார்கள்.
ராஜசேகர ரெட்டி மீது அவதூறு பரப்பினால் அவரை வெறுத்து விடுவார்கள் என்று காங்கிரஸ் தப்புக்கணக்கு போடுகிறது. சமீப காலமாக சி.பி.ஐ. போலீசார் நேர்மையானவர்களை குறி வைத்துள்ளனர். அதே சமயம் உண்மை குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். இதை நாட்டு மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவர்கள் தேர்தலின் போது காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ