உணவுப் பாதுகாப்பு மசோதா மாற்றங்களுக்கு ஒப்புதல்

Image Unavailable

புதுடெல்லி, நவ.18 - உத்தேசமாக வடிவமைக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.  மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார். உணவுப் பொருள் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் அதன் தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு பிரணாப் முகர்ஜி தனது ஒப்புதலை வழங்கியுள்ளார் என்று தாமஸ் தெரிவித்தார். இந்த ஒப்புதல் பெற்ற நகல் மசோதா இதர அமைச்சகங்களின் கருத்து பரிமாற்றத்திற்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் கூடிய உணவுப் பொருள் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு அங்கீகாரம் வழங்கியது. இந்த மசோதாவில் இப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள 75 சதவீத மக்களுக்கும் நகர்ப்புறங்களில் உள்ள 50 சதவீதம் மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த தேசிய உணவு பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அளிப்பது, பெண்கள், அனாதைகள், முதியோருக்கு 3 கிலோவுக்கும் கூடுதலாக மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவது உள்ளிட்ட சில முக்கிய மாற்றங்கள் அந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் கே.வி.தாமஸ் தெரிவித்தார். இந்த புதிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்றும் தாமஸ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்