முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமுறைகள் மீறல் - நெப்போலியன் மீது வழக்கு

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை மார்ச்-10 - நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நலத்திட்ட உதவிகள் வழங்கியதாக தி.மு.க. மத்திய அமைச்சர் நெப்போலியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் நலத்திட்ட உதவிகள் வழங்வும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் செய்யவும், டிஜிட்டல் பேனர்கள் வைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறி நலத்திட்ட உதவிகள் வழங்கும் கட்சிகளின் மீதும், சுவர் விளம்பரங்கள் செய்து வரும் கட்சிகள் மீதும் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுவருகிறது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வசந்த குமார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு பொருட்கள் வழங்கியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு விநியோகம் செய்யப்பட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விடுதலைச் சிறுத்தைகள், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக  கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி கல்லிடைக்குறிச்சியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நெப்போலியன் பொது மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். இதனையறிந்த கல்லிடைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பரமசிவன் மத்திய அமைச்சர் நெப்போலியன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நலத்திட்ட உதவிகள் வழங்கியதாக கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் நெப்போலியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்