முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலம்பட்டி வழக்கு: இருவருக்கு காவல் நீட்டிப்பு

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், நவ.19 - திருமங்கலம் அருகே ஆலம்பட்டி ஓடுபாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இருவருக்கு காவல் நீட்டிப்பு செய்து திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி அத்வானி ரதயாத்திரையின் போது ஆலம்பட்டி ஓடுபாலத்தில் மர்ம மனிதர்கள் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டுகளை வைத்திருந்தனர். இதனை உரிய நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து செயலிழக்கச்செய்தனர். பின்னர் இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு படையினர் மதுரையை சேர்ந்த அப்துல்லா, இஸ்மத் ஆகிய இரு வாலிபர்களை கைது செய்து திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

இதனிடையே நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைவதை தொடர்ந்து அப்துல்லா, இஸ்மத் ஆகிய இருவரையும் நேற்று காலை திருமஙகலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இதையடுத்து இருவருக்கும் டிசம்பர் 2-ம் தேதி வரை காவல்நீட்டிப்பு செய்து நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில் பலத்த போலீஸ் காவலுடன் இருவரும் மதுரை கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!