முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியிலும் - நூலகத்திலும் புரட்சி ஏற்படும்: அமைச்சர்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - பொது நூலகர் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது, பொது நூலகங்களுக்கு புத்தகம் வாங்க ரூ.25 கோடியும், கட்டிடம் கட்ட ரூ.25 கோடியும் ஒதுக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் கல்வியிலும், நூலகத்திலும் புரட்சி ஏற்படும் என்றார். பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் சார்பில் நல் நூலகர் விருது வழங்கும் விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் கு.தேவராஜன் தலைமை தாங்கினார். பொது நூலக இயக்குனர் ச.அன்பழகன் வரவேற்று பேசினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களில் பணிபுரியும் 32 சிறந்த நூலகர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு நல் நூலகர் என்ற விருதையும் தலா ரூ.2 ஆயிரம் பரிசையும் வழங்கினார். 

விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:​  ச.அம்பேத்கர்(அரியலூர்), சி.ஆ.மோகனரங்கம், எம்.முரளி(இருவரும் சென்னை), ச.சரவணன், க.கலைமொழி(இருவரும் கோவை), பி.ரகுநந்தனன்(கடலூர்), எஸ்.சுசீலா(திண்டுக்கல்), ஆர்.லோகநாதன்(ஈரோடு), ​கு.தாமோதரன்(காஞ்சீபுரம்), ரா.ச.சுகன்யா(கரூர்), nullஎஸ்.கோபால்(நீலகிரி), பா.ராமகிருஷ்ணன்(புதுக்கோட்டை), நா.காசிநாதன்(ராமநாதபுரம்), கே.மகேஸ்வரி, கே.வடிவேலு(இருவரும் சேலம்), எஸ்.லலிதா(சிவகங்கை), ​கி.பிரியா(தஞ்சை), பெ.வடிவேல்(தேனி), இரா.சுந்தரேசன், த.வெங்கடசேன்(இருவரும் திருவண்ணாமலை), தி.பு.சம்பத்(திருவள்ளூர்), த.செல்வக்குமார், வி.கவிதா(இருவரும் திருவாரூர்), கோ.சுமித்ரா(தூத்துக்குடி), மு.மோகன், மா.செல்வகுமார்(இருவரும் திருச்சி), ​மு.வெற்றிவேலன்(திருநெல்வேலி), ஏ.கணேசன்(வேலூர்), கு.திருஞானசம்பந்தம்(விருதுநகர்), மு.அன்பழகன், நா.சரஸ்வதி(இருவரும் விழுப்புரம்), அ.சுந்தரம்(சென்னை கன்னிமாரா நூலகம்).

விருது வழங்கும் விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:​

இந்தியாவில் பொதுநூலகங்கள் முறையான அமைப்புடன் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் முடிந்துள்ளன. 1910​ம் ஆண்டு பரோடா மன்னர் 2​ம் கெய்க்வாட் ஆங்கிலேய நூலக வல்லுனர்களின் ஆலோசனைபடி முறையான அமைப்புடன் செயல்படும் நூலகங்களை தொடங்கினார். இதைத்தொடர்ந்து 1919​ம் ஆண்டு சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள கோகலே ஹாலில் அகில இந்திய நூலக ஆர்வலர்களின் மாநாடு நவம்பர் 14​ந்தேதி நடைபெற்றது. 1932​ம்ஆண்டு அகில இந்திய அளவில் இந்திய நூலக சங்கம் ஏற்படுத்தப்பட்டு சங்கத்தின் முதல் செயலாளராக தமிழகத்தைசேர்ந்தவரும் நூலக அறிவியலில் தலைசிறந்த இடத்தை பெற்றவருமான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் பணியாற்றினார். அவரது முயற்சியால் முதல் முதலாக தமிழகத்தில் 1948​ம் ஆண்டு பொது நூலக சட்டம் இயற்றப்பட்டு 1950​ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தமிழ்நாட்டில் 4,041 நூலகங்கள் உள்ளன. இதில் ஊர்ப்புற நூலகங்கள் 1,795, கிளை நூலகங்கள் 1,664, நடமாடும் நூலகங்கள் 10, பகுதி நேர நூலகங்கள் 539, மாவட்ட நூலகங்கள் 32, மாநில மத்திய நூலகம் 1 ஆகும்.   

முதல்​அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி பொது நூலகங்களுக்கு ரூ.25 கோடிக்கு புத்தகம் வாங்கவும், ரூ.25 கோடிக்கு புதிய நூலக கட்டிடங்கள் கட்டவும், ரூ.10 கோடி செலவில் கட்டிட பராமரிப்பு பணிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மாவட்ட நூலகங்களில் 1,093 ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் nullர்த்தி செய்யவும் 260 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை ஊர்ப்புற நூலகர்களை கொண்டு பதவிஉயர்வு மூலம் nullர்த்தி செய்யவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நூலகங்களும் டிஜிட்டல் ஆக்கும் பணி நடைபெற்று வருகிறது.   முதல்​அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கல்வியிலும், நூலகத்திலும் புரட்சி ஏற்படும். 

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். 

விழாவில் ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை தென்மண்டல களப்பணி அலுவலர் ர.ராமசாமி உள்பட பலர் பேசினர். பொதுநூலக இணை இயக்குனர் கி.தங்கமாரி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்