முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் கன்னியாஸ்திரி கொலை: 3 பேர் கைது

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

ராஞ்சி, நவ.19 - கேரள கன்னியாஸ்திரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஜார்க்கண்ட் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளியை சேர்ந்தவர் வல்சாஜான்.கடந்த 1984 ம் ஆண்டு கன்னியாஸ்திரியான இவர், கொச்சியில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் பொருளாதார ஆசிரியையாக பணியாற்றினார். பின்னர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய விரும்பி அவர் ஜார்கண்டு மாநிலம் தும்கா பகுதிக்கு சென்றார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பர்கூர் மாவட்டம் பச்வாரா கிராமத்தில் இருந்த கன்னியாஸ்திரியை சரமாரியாக வெட்டினர். இதில் வல்சாஜான் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது மரண செய்தி கேட்டு கேரளாவில் உள்ள அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இது குறித்து கன்னியாஸ்திரியின் மூத்த சகோதரர் எம்.ஜே. பேபி கூறும் போது, தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று வல்சா தெரிவித்தார். ஆனால் மாபியா ஆட்கள் அவரை இப்படி படுகொலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.  இரவு 2 மணிக்கு வல்சாவின் வீட்டுக்கு வந்த கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது என்று எங்களுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். ஜார்கண்டில் சட்டப் படிப்பு படித்து வந்த அவர், அம்மாநில அரசியல் தலைவர்கள் சிபுசோரன், ஸ்டீபன் மராண்டி ஆகியோரிடம் கூட இது குறித்து தெரிவித்துள்ளார். நிலக்கரி மாபியா ஆட்கள் வல்சாவுக்கு பணம் தர முன்வந்துள்ளனர். அவர் மறுக்கவே அவரை படுகொலை செய்துள்ளனர் என்றார். 

இந்த நிலையில் கன்னியாஸ்திரி வல்சாஜான் கொலை தொடர்பாக 3 பேரை ஜார்க்கண்ட் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர் என்று  போலீஸ் ஐ.ஜி.  அருண்ஓரான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் 5 பேரை தேடி வருவதாகவும் அவர் கூறினார். கன்னியாஸ்திரி படுகொலை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது உறுதி செய்யப்பட்டதும் எப்.ஐ.ஆர். மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்