இந்திரா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, தலைவர்கள் அஞ்சலி

Image Unavailable

புது டெல்லி, நவ. 20- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சக்தி ஸ்தலத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உட்பட பல்வேறு தலைவர்களும் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.  இந்திராவின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த நாடே அவருக்கு நேற்று அஞ்சலி செலுத்தியது. யமுனை நதிக் கரையோரம் உள்ள அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கமல்நாத், சுஷில்குமார் ஷிண்டே மற்றும் கிருஷ்ணதிராத் ஆகியோரும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியாவும் இந்திரா நினைவிடத்துக்கு சென்று அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். மேலும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்திராவின் திருவுருவப் படத்திற்கு தலைவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.  1917 ம் ஆண்டு நவம்பர் 19 ம் தேதியன்று இந்திரா காந்தி பிறந்தார். பண்டித ஜவஹர்லால் நேருவின் செல்ல மகளான இந்திரா காந்தி, இந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார். இவரது தந்தை ஜவஹர்லால் நேரு சுதந்திர போராட்ட இயக்கத்தில் முக்கிய அங்கம் வகித்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும் இவரே. 1964 ம் ஆண்டு நேருவின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தி ராஜ்யசபை உறுப்பினரானார். பிறகு லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக இந்திரா காந்தி சேர்க்கப்பட்டார். பின்னர் இந்த நாட்டின் பிரதமரானார். 16 ஆண்டுகள் ஆண்ட இவரை 16 குண்டுகள் துளைத்ததுதான் வேதனைக்குரிய விஷயம்.  1966 முதல் 1977 வரை 3 முறை தொடர்ந்து பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. 1984 ம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி தனது மெய்க்காப்பாளர்களாலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மறைவுக்குப் பிறகு இவரது மகன் ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமரானார். 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த போது அவரும் மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த நாட்டிற்காக தாயும், மகனும் ரத்தம் சிந்தி உயிர்நீத்தார்கள் என்பதை இன்றும் இந்த நாடு மறக்கவில்லை. நேற்று இந்திராவின் பிறந்த நாளை இந்த நாடே உற்சாகமாக கொண்டாடி அவருக்கு அஞ்சலி செலுத்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்