முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.4 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் பள்ளி ஆசிரியர் உட்பட 7 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      தமிழகம்

 

கிருஷ்ணகிரி நவ.20 - கிருஷ்ணகிரியில் தொழிலதிபரை கடத்தி ரூ.4 கோடி கேட்டு மிரட்டிய அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி அடுத்த தொகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துரைசெல்வம்(57). பிரபல தொழில் அதிபர். கிருஷ்ணகிரியில் கூட்டுறவு காலனியில் துரை மோட்டார்ஸ் எனும் விவசாய சம்பந்தமான டிராக்டர், டில்லர் போன்ற வாகனங்களை விற்பனை செய்து வருகிறார்.  இந்நிலையில் இவர் கடந்த 16ம் தேதி இரவு தனது காரில் தனியாக  கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு காவேரிப்பட்டணம் வழியாக வந்து கொண்டிருந்துள்ளார். காவேரிப்பட்டணம் மேம்பாலத்தில் இருந்து வேலம்பட்டி செல்லும் சாலையில் திருக்பும்போது ஒரு லாரி இவரது கார் மீது மோதுவது போல் இடித்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனம் மற்றும்  ஒரு டாடா சுமோவில் வந்த 10 பேர் காரில் இருந்து இறங்கிய துரை செல்வத்தை குண்டுகட்டாக தூக்கி அவர்கள் வந்த டாடா சுமோவில் போட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் துரைசெல்வம் ஓட்டி வந்த காரையும் உடன் ஓட்டி கொண்டு சென்றுள்ளனர். அன்று இரவு null வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு துரைசெல்வம் வராததால் அவரது மகன் குமரகுரு அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் எடுக்கவில்ல  இதில் சந்தேகம் அடைந்த அவரது மகன் மீண்டும் துரைசெல்வத்தின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்  அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து நள்ளிரவில் தனது மகனுக்கு போன் செய்த துரைசெல்வம், ரூ. 4 கோடி கேட்டு என்னை ஒரு கும்பல் கடத்தியுள்ளனர். ரூ. 4 கோடி கொடுத்தால் உயிருடன் விட்டுவிடுவதாகவும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகின்றனர் என கூறி மீண்டும் செல்போன் இணைப்பை துண்டித்துள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் துரைசெல்வத்தின் மகன் குமரகுரு கிருஷ்ணகிரி  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில், போலீஸ் டி.எஸ்.பி ரவிகுமார் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதன்பின் தொடர்ந்து துரைசெல்வத்திடம்இருந்து அவரது மகனுக்கு செல்போன் வந்து கொண்டிருந்துள்ளது. அந்த போன் எந்த இடத்தில் இருந்து வருகிறது என்பதை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பின்னர் அந்த போன் வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள கேவிகுப்பம் பகுதியில் இருந்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்குள்ளவர்களிடம் புதியதாக எந்த காராவது வந்துள்ளதா என விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் அங்குள்ள சங்கர் என்பவரது தென்னந்தோப்பில் ஒரு கார் நின்று கொண்டிருப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு மறைந்திருந்த போலீசார்  இரவு அந்த தோப்பிற்கு சென்று அங்குள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். 

பின்னர் உள்ளே இருந்த துரைசெல்வத்தை மீட்டனர். அத்துடன் அவரை கடத்திய பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார்(46). (இவர் பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்). அங்கிநாயனப்பள்ளி ராஜா(57), கேவிகுப்பம் சங்கர்(28), ரமேஷ்(30), சந்தீப்(27), சந்திரசேகர்(27), நாட்றம்பள்ளி அருள்(38) ஆகிய 7 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  பின்னர் அவர்களிடம் இருந்த 7 செல்போன்கள், வீச்சறிவாள் மற்றும் சிறிய கத்தி, ஒரு டாடா சுமோ, இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரிக்கு 7 பேரையும் கைது செய்து அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரையும், ஒரு லாரியையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்