முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் வேண்டுகோளை மக்கள் ஏற்க வேண்டும்: சரத்குமார்

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.20- பஸ், பால், மின் கட்டண உயர்வுக்கு முதல்வரின் உருக்கமான வேண்டுகோளை மக்கள் ஏற்க வேண்டும் என்றும், முதல்வரின் நிர்வாகத் திறமையால் சீர்செய்து மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மீண்டும் சரிசெய்வார் என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்வர் பால்விலை, பஸ் கட்டண உயர்வையும், மின் கட்டணம் உயர இருப்பதையும் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பில் தமிழக அரசின் நிதிநிலையையும் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் உள்ளது. உள்ளபடியே விளக்கியுள்ளார். அந்த உருக்கமான  அறிக்கை நம் ஒவ்வொருவர் இதயங்களிலும் வேதனையை அளித்துள்ளது. ஒவ்வொரு தனிப்பட்ட பொதுமக்களும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டாலும் மக்களுக்காகவே இயக்கப்படும் ஆவின் நிறுவனம் அரசுப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக தான் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அத்துடன் பால் விலை உயர்வால் ஏழை விவசாயிகளுக்கும், மாநாடு வளர்ப்பவர்களுக்கும் பால் விலை கூடுதல் கிடைக்கும் என்பது உறுதி. மேற்படி நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. அரசு பால் விலையை உயர்த்தியிருந்தாலும் தனியார் பால் விற்பனை விலையைவிட ஆவின் பால் விலை குறைவாகத்தான் இருக்கிறது, தனியார் பஸ்கள் தொலைதூரம் செல்ல வசூலிக்கும் கட்டணத்தைவிட உயர்த்தப்பட்ட அரசு பஸ்கட்டணமும் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த விலை உயர்வு, பஸ்கட்டண உயர்வு மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருந்தாலும் நம் தமிழக அரசின் நிலையை கருதி ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம். தமிழக முதல்வரின் சீர்மிகு செயல்பாட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் விரைவில் தீர்ந்துவிடும் என்பது உறுதி. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களின் தேவைகளை விலையில்லா பல நல திட்ட உதவிகளை செய்து அவர்களின் வாழ்க்கையை  செம்மைப்படுத்தும் தமிழகத்தின் முதல்வர், மேற்கண்ட நிறுவனங்களின் நிதிநிலையை தன்னுடைய நிர்வாக திறமையால் சீர்செய்து, நடுத்தர மக்களின் தேவை உணர்ந்து அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மேற்கண்ட கட்டணங்களை மீண்டும் சீரமைப்பார் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நம்பிக்கை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்