எம்.பி.க்களை திரும்பப்பெறுவது இந்தியாவில் சாத்தியமில்லை- பிரணாப் முகர்ஜி

Image Unavailable

கொல்கத்தா, நவ.- 21 - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை அல்லது வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை இவையெல்லாம் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்துள்ளார். இந்த விஷயத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் கொல்கத்தாவில் நடந்த பஞ்சாயத்துராஜ் மாநாட்டில் அன்னா ஹசாரேவின் பெயரை குறிப்பிடாமல் அவர் சில கருத்துக்களை தெரிவித்தார். உலகிலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு 122 கோடிக்கு மேலாக மக்கள் தொகை உள்ளது. ஒவ்வொரு லோக்சபா எம்.பி.க்கும் சராசரியாக 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எம்.பி.க்களை திரும்பப் பெறுவது அல்லது வேட்பாளர்களை நிராகரிப்பது என்பதெல்லாம் சாத்தியமா? என்று எனக்கு தோன்றவில்லை. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இது நிச்சயமாக சாத்தியமே இல்லை. இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். முன்னதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, லோக்பால் விஷயம் தொடர்பாக தனது 12 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட பிறகு ஒரு கருத்தை கூறியிருந்தார். ஊழலை ஒழிக்க வேண்டும். அதற்கு தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அந்த வகையில் எம்.பி.க்களை திரும்பப் பெறுவது மற்றும் வேட்பாளர்களை நிராகரிப்பது போன்றவற்றுக்காக தான் போராடப்போவதாக கூறியிருந்தார். இதைக் குறிப்பிட்டுத்தான் பிரணாப் முகர்ஜி மேற்கண்டவாறு தமது கருத்தைத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்