முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் பிரதமருடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

சிங்கப்பூர், நவ.- 21 - இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசன் லுங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சிங்கப்பூரில் இருந்து பெரும் முதலீடுகள் இந்தியாவில் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அங்கு உற்சாக வரவேற்று அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமரை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்தினார். அப்போது விரிவாக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு தனது நாட்டின் ஆதரவை சிங்கப்பூர் பிரதமர் லீ தெரிவித்துக்கொண்டார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ மதிய விருந்து கொடுத்தார். அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சிங்கப்பூர் உடனான உறவுக்கு எங்கள் அரசு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கும் என்று தெரிவித்தார். உள்கட்டமைப்பு முன்னேற்றத்துக்காக நாங்கள் பல திட்டங்களை வகுத்துள்ளோம். அதற்கு சிங்கப்பூரும் ஒத்துழைக்கும். காரணம் சிங்கப்பூர் எங்கள் மதிப்பு மிக்க நட்பு நாடு என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். மேலும் சிங்கப்பூரில் இருந்து தொழில்நுட்பத்தையும், பெரிய அளவில் முதலீட்டையும் தாம் வரவேற்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்