அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் திடீர்நிலநடுக்கம்

Image Unavailable

கவுகாத்தி, நவ. - 22 - அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட  சில வட கிழக்கு மாநிலங்களில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் நேற்று  காலை  திடீர் நில நடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 8.46 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவையில் 5.8 ஆக பதிவாகியிருந்ததாக ஆய்வு மையம்  கூறியுள்ளது. இந்த நில நடுக்கம் மியான்மார் நாட்டில் மையம் கொண்டிருந்ததாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நேற்று காலை 8.47 மணிக்கு ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில்  இந்த நில நடுக்கம் 15 வினாடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ