முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாலெட்சுமி வந்திருக்கிறாள்! பேத்தி பற்றி அமிதாப் பெருமிதம்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

மும்பை, நவ. - 24 - மருத்துவமனையில்இருந்து ஐஸ்வர்யா ராய் குழந்தையுடன் வீடு திரும்பினார். இது குறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், என் வீட்டுக்கு மகாலெட்சுமி வந்திருக்கிறாள் என்றார்.  நடிகை ஐஸ்வர்யாராய்க்கு கடந்த 16 ம் தேதி செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 6 நாட்களுக்கு பிறகு ஐஸ், தனது மகளுடன் ஜூகூ கடற்கரையில் உள்ள அமிதாப்பச்சனின் வீட்டுக்கு திரும்பினார். இது குறித்து அமிதாப் கூறுகையில், ஐஸ்வர்யாராயும், குழந்தையும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எங்கள் வீட்டில் பேத்தி பிறந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மகாலெட்சுமியே எங்கள் வீட்டுக்கு வந்ததாக உணர்கிறோம். ஒருவருடைய வீட்டுக்கு புதிய உறுப்பினர் வருகை தரும் போது அவர்கள் வாழ்க்கையே மாறி விடும். அதே போல் நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் குடும்பத்தில் அந்த உணர்வு வந்துள்ளது. முதலில் நாங்கள் எங்களது பழைய வீட்டுக்கு சென்றோம். மறைந்த என் தந்தை மற்றும் தாயார் ஆசிர்வாதத்தை பெறுவதற்காக அங்கு சென்றோம். பின்னர்தான் ஜூகு கடற்கரை வீட்டுக்கு வந்தோம். அபிஷேக்கும், ஐஸ்வர்யாராயும் பெண் குழந்தையை தான் விரும்பினர். அதே போல் பெண் குழந்தை பிறந்தது எங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது. குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ரசிகர்களிடம் இருந்து குழந்தையின் பெயர் சம்பந்தமாக ஏராளமான கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. எங்கள் குடும்பத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது எந்தவொரு சடங்கும் செய்வதில்லை. பெயர் வைப்பதற்காக எந்த விழாவும் கொண்டாடும் வழக்கமில்லை. எனவே அந்த நிகழ்ச்சி மிகவும் எளிமையாக இருக்கும் என்றார் அமிதாப். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony