முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசி உயர்வு குறித்து முலாயம்சிங்குடன் பிரணாப் முக்கிய ஆலோசனை

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.- 24 - விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சனையை கிளப்பிவரும் வேளையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவிற்கு பகல் விருந்து கொடுத்து விலைவாசி சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய ஆலோனை நடத்தினார். விலைவாசி உயர்வு குறித்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக கோரிக்கை எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் விலைவாசி உயர்வு குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவுடன் பகல் விருந்து ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி அங்கம் வகிக்கவில்லை. என்றாலும்கூட இந்த கட்சியின் தலைவர் முலாயம்சிங்குடன் விலைவாசி உயர்வு குறித்து பிரணாப் முகர்ஜி ஆலோசித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாராளுமன்றத்தின் லோக்சபையில் சமாஜ்வாடி கட்சிக்கு 22 எம்.பி.க்கள் உள்ளனர். விலைவாசி உயர்வு பிரச்சனையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங்  ஏற்கனவே கூறியிருந்தார். இதையடுத்து யாதவை சமாதானப்படுத்துவதற்காக இந்த பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஆனால் இந்த பகல் விருந்து கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவான உறுதிமொழி எதையும் சமாஜ்வாடி கட்சியிடம் இருந்து மத்திய அரசு பெறவில்லை என தெரிகிறது. விலைவாசி பிரச்சனையில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னால் மற்ற கட்சிகளின் தலைவர்களையும் தான் சந்தித்து பேச இருப்பதாக யாதவ் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்