முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில்-சுக்ராம்அப்பீல்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 24 - தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சுக்ராம் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று அப்பீல் செய்தார்.  1996 ம் ஆண்டு நடந்த டெலிகாம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பாண்டே கடந்த சனிக்கிழமையன்று உத்தரவிட்டது தெரிந்ததே. தொலைத் தொடர்பு துறைக்கு கேபிள் வழங்குவதற்காக போடப்பட்ட காண்டிராக்ட்டில் தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ. 3 லட்சம் லஞ்சம் பெற்றதாக மாஜி மந்திரி சுக்ராம் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சுக்ராம் நரசிம்மராவ் அமைச்சரவையில் அமைச்சராக அங்கம் வகித்தவர்.  இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. அப்போது நீதிபதி பாண்டே சுக்ராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து சுக்ராம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். சுக்ராம் வாங்கியதாக கூறப்படும் லஞ்சமோ ரூ. 3 லட்சம். ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதமோ ரூ. 4 லட்சம். இந்த தண்டனை மற்றும் அபராதத்தை  எதிர்த்து மாஜி மந்திரி சுக்ராம் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். அவர் சார்பாக டெல்லி ஐகோர்ட்டில் இந்த மனு ஐகோர்ட் பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பதிவக வட்டாரங்கள் தெரிவித்தன. தண்டனை பெற்ற சுக்ராம் ஏற்கனவே இரண்டு ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 13 ஆண்டுகள் ஜாமீனில் இருந்த சுக்ராம் சில தினங்களுக்கு முன்புதான் தண்டனை பெற்று சிறைச்சாலைக்கு சென்றார். தற்போது அவர் தனது தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis