முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் மன்சூர் அலிகான் மீது தொழிலதிபர் புகார்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.25- அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சேக் மதார் (38). இம்ரா இன்டர்நேஷனல் கார்மென்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

எனது நிறுவனத்தின் தேவைக்காக வட்டிக்கு பணம் கொடுக்கும் எஸ்.வி.எஸ். மணியை நாடினேன். அவர், நடிகர் மன்சூர் அலிகானின் மேக்சல் பைனான்ஸ் நிறுவனம் மூலம் பணம் வாங்கி தருகிறேன் என்று சொன்னார். மாத வட்டி கிடையாது, வார வட்டி கட்டும் முறைதான் உள்ளது என்று கூறினார். இதனை தொடர்ந்து ரூ.30 லட்சத்தை வட்டிக்கு வாங்கினேன். ஒரே மாதத்தில் ரூ.26 லட்சத்தை திருப்பி அடைத்தேன். ஆனாலும் இன்னும், வட்டியாக ரூ.25 லட்சம் தரவேண்டும் என்று கூறுவதுடன், நான் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் வில்லன் தான் என்று மிரட்டுகிறார் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை நடிகர் மன்சூர் அலிகான் மறுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony