முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் அமளி - இரு சபைகளும் ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.25 - தனித் தெலுங்கானா, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாராளுமன்றத்தில் நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது. லோக்சபை மற்றும் ராஜ்ய சபைகள் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 22 ம் தேதி துவங்கியது. அப்போது  விலைவாசி உயர்வு, தனித் தெலுங்கானா, கறுப்புப்பணம் உ.பி.யை 4 ஆக பிரிக்கும் மாயாவதியின் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளியை அடுத்து அன்றைய தினம் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன.

இரண்டாவது நாள் அன்றும் இதேபோல பல்வேறு முக்கிய பிரச்சனைகளை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி கூச்சல் குழப்பம் செய்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் அன்றைய தினமும் பாராளுமன்றம் முடங்கியது 

நேற்று காலை பாராளுமன்த்தின் லோக்சபை கூடியதும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து தனித் தெலுங்கானா விவகாரத்தை கிளப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்படவே சபாநாயகர் மீராகுமார் சபையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார். பிறகு சபை மீண்டும் கூடியபோது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மீண்டும் தனித் தெலுங்கானா பிரச்சனை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி., உணவு தானியங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதாரவிலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்.  இந்த பிரச்சனைகளை கிளப்பிய எம்.பி.க்கள் அனைவரையும் அவரவரது இருக்கைகளுக்கு சென்று அமைதியாக உட்காருமாறு மீராகுமார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரது வேண்டுகோளை ஏற்காமல் அந்த எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தனர். இதையடுத்து லோக்சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 

இதேபோல ராஜ்யசபையிலும் நேற்று விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து இடதுசாரி எம்.பி.க்கள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபையும் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு ராஜ்யசபை கூடியதும்,  கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க சபையில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷமிட்டனர். இதனால் கேள்வி நேரத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபை, பிறகு மீண்டும் கூடியபோது விலைவாசி உயர்வு பிரச்சயை மீண்டும் கிளப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

எதிர்க்கட்சி எம்.பி.க்களை அமைதிப்படுத்த சபையின் தலைவர் ஹமீது அன்சாரி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ராஜ்யசபையும் நேற்று பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis