முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்லாரி இடைத்தேர்தல்: துணைராணுவம் குவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

பெல்லாரி, நவ.25 - கர்நாடக மாநிலம் பெல்லாரி ரூரல் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி ரூரல் சட்டமன்ற தொகுதிக்கு இம்மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் சதானந்த கவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா மற்றும் கர்நாடக அமைச்சர்கள் ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொகுதி மிகவும் முக்கியமான தொகுதி என்பதால் இங்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 துணை ராணுவத்தினர் நேற்று பெல்லாரி வந்து இந்த தொகுதிக்கு உட்பட்ட 60 கிராமங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர். 

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இடைத்தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும்  நடத்தவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்