முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்பவார் மீதான தாக்குதல் என்.சி.பி. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

அகமதுநகர், நவ. - 26 - மத்திய அமைச்சர் சரத்பவார் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரது சொந்த கிராமத்திலேயே எதிர்ப்பு போராட்டமும் நடத்தினார்கள்.  மத்திய வேளாண்மை அமைச்சர் சரத்பவார் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வாலிபர் ஒருவரால் தாக்கப்பட்டார். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும், ஊழலுக்கும் அவர்தான் காரணம் என்று கூறி சரத்பவாரை அந்த வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. சரத்பவார் மீதான தாக்குதலை பல்வேறு தலைவர்களும் கண்டித்து வருகிறார்கள். ஆனால் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்த தாக்குதல் சரிதான் என்பது போல கருத்து கூறியிருந்தாராம். இதற்கு சரத்பவார் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அன்னா ஹசாரேவின் சொந்த கிராமம் மகராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு சென்ற தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் அங்குள்ள யாதவ்பாபா கோயிலுக்கு சென்று அந்த கோயிலுக்கு வெளியே கோஷங்களை எழுப்பினார்கள்.
அன்னா ஹசாரே தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டம் நீடித்துக் கொண்டிருந்த போது அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட பலரும் அங்கு வந்து அவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்படும் நிலை ஏற்பட்டது. ஆனால் போலீசார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர். பிறகும் கூட சரத்பவார் கட்சி தொண்டர்கள் கோயிலுக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்