முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல் வழக்கில் ஜாமீன் கேட்டு பல்வா, சந்தோலியாவும் மனு தாக்கல்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி. நவ. - 27- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 தனியார் கம்பெனிகளின் உயர் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு  ஜாமீன் வழங்கியதை அடுத்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸாஹீத் உஸ்மான் பல்வா, முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவின் தனி செயலாளர் சந்தோலியா ஆகியோரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சி.பி. ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்  தி.மு.க.வை  சேர்ந்த முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இவர்களில் 5 தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதை அடுத்து தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி  கனிமொழி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று முன் தினம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வக்கீல்களின் வாதம் முடிவடையாததால் இந்த மனு மீதான விசாரணை வருகிற திங்கள் கிழமையும் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் சாஹீத் உஸ்மான் பல்வா,  ஆ.ராசாவின் முன்னாள் தொலை தொடர்பு தனி செயலாளர்  ஆர்.கே. சந்தோலியா ஆகியோரும்  தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற திங்கள் கிழமை தனியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 தனியார் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் 5 பேருக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.  அவர்களுக்கு ஜாமீன் கிடைத்திருக்கும் போது இவர்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாங்கள் சி.பி. ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளதாக இருவரின் சார்பில் ஆஜரான அவர்களது வக்கீல்கள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் இவர்கள் இருவர் மீதான குற்ச்சாட்டுக்கள் ஏற்கனவே பதிவு  செய்யப்பட்டு விட்டதால்  இவர்களை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்ற அடிப்படையிலும்  மனு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்