முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் கனிமொழிக்கு கட்சி பதவி?

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, நவ.30 - கனிமொழிக்கு தி.மு.க.வில் முக்கிய பதவி அளிக்கப்படும் எனத் தெரிகிறது. 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் 6 மாதங்களுக்கு மேலாக டெல்லி திகார் சிறையில் இருந்து வந்தார் கனிமொழி.  4 முறை அவரது ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில் டெல்லி ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் தி.மு.க.வில் கனிமொழிக்கு முக்கிய பதவி அளிக்கப்படும் என்று தெரிகிறது. தற்போது கனிமொழி உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 

இப்போது கனிமொழிக்கு ஆற்காடு வீராச்சாமி வகித்து வரும் தலைமை கழக முதன்மை செயலாளர் பதவி அளிக்கப்படும் எனத் தெரிகிறது. பொருளாளர் பதவியை மு.க. ஸ்டாலினுக்காக ஆற்காடு வீராச்சாமிதான் விட்டுக் கொடுத்தார். இப்போதும் ஆற்காடு வீராச்சாமியே முன்வந்து தன் பதவியை கனிமொழிக்கு அளிக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதைப் போல துணை பொதுச் செயலாளர் பதவி வகிக்கும் சற்குண பாண்டியனும் தன் பதவியை கனிமொழிக்கு அளிக்குமாறு கூறியதாக தெரிகிறது. இந்த இரண்டு பதவிகளில் ஒன்று கனிமொழிக்கு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. 

மற்றொரு தரப்பில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி அளித்து தமிழகம் முழுவதும் கனிமொழியை சுற்றுப் பயணம் மேற்கொள்ள செய்யவும் திட்டமிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராச்சாமி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன் திங்கட்கிழமை மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.  இதற்கு மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி அனைவரும் சம்மதித்து விட்டதாக தெரிகிறது. 

இதற்கிடையில் செயல் தலைவர் பதவியை தனக்கு அளிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கேட்டதாக தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் கூடும் எனத் தெரிகிறது. இதில் கனிமொழி, மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு பதவி அளிக்கப்படும் என தி.மு.க வட்டாரம் கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்