முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு: சரத்குமார் கண்டனம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.30 - சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதியளித்ததால் 7 கோடி வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதியளிப்பதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும், சில்லரை வணிகர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி நாளிலிருந்தே சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களையும், அந்நிய முதலீடுகளையும் அனுமதிக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கட்சியின் முதல் மாநில மாநாட்டில் இக்கருத்தை தீர்மானமாகவும் நிறைவேற்றியிருக்கின்றோம். 

மத்திய அரசின் இந்த முடிவு இந்திய நாட்டின் 7 கோடி சில்லரை வியாபாரிகளை பெரிதும் பாதிக்கும் என்பது உறுதி.

உள்நாட்டில் முக்கிய தொழில் நிறுவனங்களான, ரிலையன்ஸ், டாடா, பிர்லா குரூப் நிறுவனங்களும் சில்லரை வணிகத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் சில்லரை வணிக வியாபாரிகள் திணறி வருகிறார்கள். கோக்கோ கோலா, பெப்ஸி கம்பெனிகளால் உள்ளூர் குளிர்பான கம்பெனிகள் மூடப்பட்டு விட்டன. ஆகவே போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக நம் மக்களை அவர்களின் ஏஜெண்டுகளாக்கி லாபத்தை மட்டும் அவர்கள் நாட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் சில்லரை வணிகத்திலும் அன்னிய வியாபாரிகளை அனுமதிப்பது, நம் நாட்டின் சில்லரை வணிகத்திற்கும், வணிகர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி விடும். எனவே, வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்துவது நியாயமானதே.எனவே ஆங்காங்கேயும், தமிழகம் முழுவதும் நடைபெறும் இத்தகைய போராட்டங்களுக்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைவரும் தார்மீக ஆதரவு அளித்து அறப்போராட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளும் ஆர்பாட்டங்களில் பங்கேற்கவேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்