முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு பவானி புனல் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.30 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம், தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகத்தின் புதிய இணைய தளங்களை தொடங்கி வைத்து,  ஈரோடு மாவட்டம், வெண்டிப்பாளையம் கிராமத்தில் 497 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 30 மெகா வாட் திறன் கொண்ட பவானி கட்டளை கதவணை ஐஐ புனல் மின் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியமானது, தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம் எனும் பிரதான நிறுவனமாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகம் என இரு துணை நிறுவனங்களாகவும் திருத்தி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளமான ஆங்கிலம் மற்றும் தமிழில் நுகர்வோரின் பயன்பாட்டிற்காக இதுவரை இருந்து வருகிறது.  தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியே இணைய தளங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் நுகர்வோர் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இதன்படி தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தை  என்ற இணைய தள முகவரி மூலமாகவும்,  தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை  என்ற இணைய தள முகவரி மூலமாகவும் மற்றும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகத்தை என்ற இணைய தள முகவரி மூலமாகவும் நுகர்வோர்கள் அணுகலாம். இந்த இணைய தளங்கள் மூலம் தங்களது மின் கட்டணத்தை செலுத்துதல், மின் கட்டண விவரங்களை அறிதல், புகார்களை பதிவு செய்தல், மின்வாரிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய இதர விவரங்களை நுகர்வோர்கள் அறிந்து பயனடையலாம்.   இது தவிர, இந்த இணைய தளங்கள் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு பயனுள்ளதாகவும் அமையும்.

தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம், தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகம் ஆகிய மூன்று நிறுவனங்களின் புதிய இணைய தளங்களை நேற்று தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தொடங்கி வைத்து நுகர்வோர் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார். 

தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 497 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 30 மெகா வாட் திறன் கொண்ட பவானி கட்டளை கதவணை ஐஐ புனல் மின் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.  பவானி கட்டளை கதவணை ஐஐ புனல் மின் திட்டப் பணிகளை 2003​ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.  இந்த மின் திட்டம் ஈரோடு மாவட்டம் வெண்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன்படி பவானி கட்டளை கதவணை​ஐ மூலம் வெளியேறும் நீர் பவானி கட்டளை கதவணை ​2ல் தேக்கி வைக்கப்பட்டு 15 மெகா வாட் திறன் கொண்ட 2 அலகுகள் நிறுவப்பட்டுள்ளது.  இந்த மின் திட்டத்தின் மொத்த நிறுவு திறன் 30 மெகா வாட் ஆகும். இத்திட்டத்தை இயக்கத்திற்கு கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 95 மில்லியன் யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்ய இயலும்.  இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago