முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு கணினி

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.30 - நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் தனியார்களிடமிருந்து அரசால் கையகப்படுத்தப்பட்ட 11 ஆயிரத்து 204 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் தனியாரிடமிருந்த பல்லாயிரக்கணக்கான வன நிலங்களை அரசால் கையகப்படுத்தி அதனை பராமரிக்க வனத்துறையிடம் நேற்று வழங்கினார்கள். மேலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முறையை கண்காணிக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கி வைத்தும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், பட்டாபிராம் கிராமத்தில் புதிய வட்டாட்ச்சியர் அலுவலகத்தை காணொலிக் காட்சி (யடுக்ஷடீச் இச்டூக்டீஙுடீடூஷடுடூகி)  மூலமாக திறந்துவைத்தும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், ஒரு கணினி, ஒரு அச்சுப்பொறி, ஒரு நகலி இயந்திரம் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் தனியாரிடமிருந்த 11,204 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, வன நிலமாக அறிவிக்கப்பட்டு, அந்நிலங்களை பராமரிக்க, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29.11.2011) வனத்துறையினரிடம் வழங்கினார்கள்.

பல ஆண்டுகாலமாக தனியாரிடமிருந்த இந்த செழிப்பான வனப்பகுதியை அரசு எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றத்தால் 9.9.2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், சுமார் ஒரு வருட காலமாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 2011 ஜுன் மாதம் முதல் வன நிலங்களின் பரப்பளவு அரசால் கண்டறியப்பட்டு 11.08.2011 அன்று நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவிக்கை செய்யப்பட்டு அதன்பின் இந்த நிலங்கள் சட்டப்படி அரசால் கையகப்படுத்தப்பட்டு, வனத்துறைக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் நேற்று வழங்கப்பட்டது.

தனியார் நிலங்கள் அரசுடைமை ஆக்கப்படுவதுடன் வனவளங்களை பெருக்கும் நடவடிக்கையாக இந்த அரிய சம்பவம் அமைந்துள்ளது. ​இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் சுமார் 10,000 மனுக்கள் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டாக்கள், குடும்ப அடையாள அட்டைகள், குடிதண்ணீர் வசதி, முதியோர் உதவித் தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிக அளவிலான மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்களின் இதுபோன்ற கோரிக்கை மனுக்களை விரைவாகவும், செம்மையாகவும், மாவட்ட ஆட்சியர்கள் நிறைவேற்றிடும் பணிகளை கண்காணிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்படி ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் கொடுக்கும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச் சீட்டும் மனுதாரருக்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு மனுவுக்கும் ஒரு தனி அடையாள எண்ணும் வழங்கப்படும். மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டு அதன்மீது எடுக்கப்படும் முடிவினை கண்காணிக்கும் வகையில் காலவரையரையும் நிர்ணயிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் மூலம் மனுவின் மீது எடுக்கப்பட்ட தனது முடிவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவித்து, துணை ஆட்சியர்களால் அவற்றின் மீது எடுக்கப்பட்ட முடிவு சரிபார்க்கப்பட்டு உரிய மனுதாரருக்கு பதில் அனுப்பிவைக்கப்படும். முடிவு திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு மீண்டும் மனு மறு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சரிபார்க்கப்படும். இந்த புதிய திட்டத்தினால் மாவட்டந்தோறும் நிலுவையில்

உள்ள மனுக்களின் எண்ணிக்கையினை கண்காணிப்பதுடன், கொடுக்கப்பட்ட அடையாள எண்ணைக் கொண்டு நிலுவையில் உள்ள எந்த ஒரு மனுக்களின் விவரங்களையும் மாநில அளவிலும் அரசால் கண்காணிக்கப்படும். இத்தகைய சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்தப் புதிய திட்டத்தினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிராமத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் திருத்தணி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை காணொலிக்காட்சி (யடுக்ஷடீச் இச்டூக்டீஙுடீடூஷடுடூகி) மூலமாக திறந்து வைத்தார்கள். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்திலுள்ள பட்டாபிராமபுரம் கிராமத்தில் 2.97 ஏக்கர் நிலப்பரப்பில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடம் தரைத்தளம் 417.53 சதுர மீட்டரிலும், முதல் தளம் 401.74 சதுர மீட்டரிலும், இரண்டாம் தளம் 424.86 சதுர மீட்டரிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டடத்தில் பதிவறைகள், கணினி அறை, வரவேற்பறை, கூட்டரங்கம், வட்ட வழங்கல் அலுவலருக்கான அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலருக்கன அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்ட்டுள்ள இந்த புதிய கட்டடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29,11,2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களை நவீனப்படுத்தவதற்காக ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் தலா ஒரு கணினி (இச்ஙிஙீசீசிடீஙு), ஒரு அச்சுப்பொறி (டஙுடுடூசிடீஙு) மற்றும் ஒரு ஒளி நகலி (கஹஙூடீஙு ஙசீங்சிடுக்சீடூஷசிடுச்டூ டஙுடுடூசிடீஙு ) இயந்திரம் வட்டாட்சியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள 220 வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு கணினி, அச்சுப்பொறி மற்றும் ஒளி நகலி வழங்கப்படுவதன் மூலம் அரசுக்கு 1 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இந்நிகழ்வுகளின்போது வருவாய் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வருவாய் துறையின் அரசு முதன்மைச் செயலாளர், வனத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்