முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமன்ற உறுப்பினர்களுக்கு கைபேசி: முதல்வர் வழங்கினார்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.30 - பொதுமக்களின் குறைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திடும் வகையில் சென்னை மாநகராட்சியின் 200 மாமன்ற உறுப்பினர்களுக்கு கைபேசிகளை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில், செனனை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை அறிந்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திடும் வகையில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு கைபேசிகளை வழங்கினார்கள்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி,  சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 200 வார்டுகளை உளளடக்கிய 15 மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்கள் கால விரையமின்றியும், பயனச்செலவின்றியும் மாநகர அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் அடிப்படைத் தேவைகள் குறித்த குறைகளை உடனுக்குடன் மாமன்ற உறுப்பினர்களுக்கு கைபேசியில் தெரிவிக்க மாநகராட்சி வழிவகை செய்துள்ளது. இதன்படி எண் 94454​67001 முதல் 94454​67200 வரை உள்ள கைபேசி

எண்கள் மாமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் 7 உறுப்பினர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கைபேசிகளை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். சம்மந்தப்பட்ட மாமனற உறுப்பினர்களிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை உடனுக்குடன் தெரிவித்து மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் நிவாரணம் பெற இது வழிவகை செய்யும். இந்நிகழ்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக

வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், சென்னை மாநகராட்சி மேயர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிnullர் வழங்கல் துறைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்