முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவர் பைனான்ஸ் ஈவுத்தொகை: அமைச்சர் வழங்கினார்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.30 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில்,  தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் (பவர்ஃபைனான்ஸ்) சார்பில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் 2010 -​2011ஆம் ஆண்டிற்கான ஈவுத்தொகை 10 கோடி ரூபாய்க்கான வரைவு காசோலையினை வழங்கினார். இதுபற்றி விபரம் வருமாறு:-           

தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவர்ஃபைனான்ஸ்) முற்றிலும் தமிழக அரசுக்கு சொந்தமான வங்கி சாரா நிதி நிறுவனமாக 1991 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால்  தொடங்கப்பட்டது.   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் மின்விசை திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வரும் இந்நிறுவனம் தொடக்கம் முதலே லாபத்துடன் இயங்கி வருகிறது. 

இந்நிறுவனம் 2010​- 11 ஆம் ஆண்டில் வரிக்குப்பின் நிகர இலாபமாக 64 கோடியே 43 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது.  2011 அக்டோபர் மாதம் முடிவுற்ற காலம் வரை 5,06,309 வைப்பீட்டாளர்களையும், சேகரிக்கப்பட்ட நிகர வைப்பீட்டுத் தொகையாக 5599 கோடியே 14 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளது.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் மின்விசை திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட நிகர கடன் தொகை 6748 கோடியே 4 லட்சம் ரூபாய் ஆகும்.

தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், திருக்கோயில்களில் ஒரு கால nullஜை திட்டம், சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்,  பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை முற்றிலும் nullக்குவதற்கான தமிழக அரசு சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் உட்பட தமிழக அரசின் பல்வேறு நல உதவித் திட்டங்களின் முதலீடுகளை பெற்றுள்ளது. 

இந்நிறுவனத்தின் 20​வது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் பங்கு முதலீட்டின் மீது 2010​2011ஆம் ஆண்டிற்கு 20 சதவிகிதம் ஈவுத்தொகையாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிடம் இன்று,  தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் (பவர்ஃபைனான்ஸ்) சார்பில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் 2010​- 2011 ஆம் ஆண்டிற்கான ஈவுத்தொகையில் அரசின் பங்கான 10 கோடி ரூபாய்க்கான வரைவு காசோலையினை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்