முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததும் எனது முடிவு

சனிக்கிழமை, 26 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. -26 - கனிமொழியின் ஜாமீன் மனு மீதான முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதன் பின்னர் தான் ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யவிருப்பதாகவும் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார்.  டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக ராசா அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் அவர் பேசுகையில், நான் நிரபராதி என்பதை நிரூபிக்க வழக்கு நடைமுறைகளை ஆராய்ந்து வருகிறேன். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை, அது தொடர்பான ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து படித்து வருகிறேன்.  நானே ஒரு வழக்கறிஞர் என்பதால் வழக்கு எந்த திசையில் செல்கிறது என்பதை அறிய முடிகிறது. நவம்பர் 11 முதல் சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. அவர்கள் மத்திய அரசின் கொள்கை முடிவுகள் குறித்து சாட்சியம் அளிக்கவில்லை. எனவே அவர்களை நான் குறுக்கு விசாரணை செய்ய தேவையில்லை. தற்போது ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம் அதிகாரிகள் ஆகியோர் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். அவர்களின் வாக்குமூலத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. 

அரசின் தொலை தொடர்பு கொள்கை குறித்து சாட்சிகள் வாக்குமூலம் அளிக்கும் போதுதான் நான் குறுக்கு விசாரணையில் ஈடுபடுவேன். நீங்கள் எப்போது ஜாமீன் மனு செய்வீர்கள் என்று கேட்ட போது, கனிமொழியின் ஜாமீன் மனு மீதான முடிவு தெரியட்டும். அதன் பிறகு எனது முடிவை அறிவிக்கிறேன் என்றார் ராசா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்