முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்று திறனாளிகளுக்கான பேருந்து: துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.30 - மாற்று திறனாளிகளுக்கான லிப்ட் வசதியுடன் கூடிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில், மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கு உதவும் வகையில், பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டுக்கு அருகில் மின்தூக்கி வசதியுடன் கூடிய பேருந்துகளை துவக்கிவைத்தார்.

மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகல் தங்களுடைய சக்கர நாற்காலியுடன் பேருந்துகளில் சுலபமாக ஏறி இறங்கும் வகையில், பேருந்தின் முன்பக்க படிக்கட்டுக்கு அருகில் மின்தூக்கி வசதியுடன் பேருந்துகளை வடிவமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய சக்கர நாற்காலியுடன் பேருந்தில் பயணம் செய்ய லிப்ட் வசதியுடன் கூடிய பேருந்துகளை வடிவமைக்க பேருந்து ஒன்றுக்கு 18 லட்சம் ரூபாய் செலவில் ஏழு புதிய பேருந்துகளை 1 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சக்கர நாற்காலியுடன் சுலபமாக ஏறி இறங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கு உதவும் வகையில், பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டுக்கு அருகில் மின்தூக்கி வசதியுடன் கூடிய பேருந்துகளை துவக்கி வைத்தார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பேருந்து இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்படத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையின்போது மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,   தலைமைச் செயலாளர் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை உயர் அலுவலகர்கள் கலந்துக்கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 1 கோடியே 26 லட்சம் ரூபாயில் லிப்ட் வசதியுடன் கூடிய 7 புதிய பேருந்துக்கள் முதல்வர் ஜெயலலிதா தெடங்கிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago