முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.30 - நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 பயிலும், 6.19 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.178 கோடி மதிப்புள்ள சைக்கிள்களை தமிழக முதல்வவ் ஜெயலலிதா நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இணையதளம் ஒன்றினையும், வன்னிய பொது நலச் சொத்து நல வாரிய இணையதளத்தையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாநேற்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில், நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, 7 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து 7 உலமாக்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கினார்கள்.

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ​ஆம் வகுப்பு பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டில் 178 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 2,76,776 மாணவர்களுக்கும், 3,42,151 மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 6,18,927 மிதிவண்டிகள் வழங்கப்படும். இதேபோன்று, உலமாக்களுக்கும், பள்ளி வாசல்களில் பணிபுரியும் இமாம்கள் மற்றும் மோதினார்கள், தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்கள் மற்றும் மதரஸாவில் பணிபுரியும் அரபி ஆசிரியர்கள் என 11,457 நபர்களுக்கு 3 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரத்து 632 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, 7 மாணவ மாணவியர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மிதிவண்டிகள் வழங்கி வாழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து 7 உலமாக்களுக்கும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மிதிவண்டிகளை வழங்கினார்கள்.

மைய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இடஒதுக்கீட்டின் பயனைப் பெறுவதற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெறுவதில் சிரமங்கள் உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனைக் களையும் பொருட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் / எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து இணையதளம் மூலம் தெரிவித்து உடனடியாக நிவாரணம் பெற ஏதுவாக மென்பொருள் உருவாக்கப்படும் என்று 23.08.2011 அன்று

நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் விரைந்து பெற்றிட ஏதுவாக தேசிய தகவல் தொடர்பு மைய உதவியுடன் ஒரு புதிய இணையதள (கீசிசிஙீ://சூசூசூ.சிடூ.கிச்சு.டுடூ/ஸஷஙிஸஷஙிசூ/ கிஙுடுடீசுஹடூஷடீஙூ.கீசிஙிங்)  உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய இணைய தளத்தை தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தொடங்கி வைத்தார்கள். இந்த இணைய தளம் மத்திய அரசுப் பணிகள் கல்வி உதவித் தொகை பெறுபவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வட்டாட்சியர் அலுவலரிடமிருந்து விரைந்து பெறுவதற்கு பயன்படும்.

வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, உயிலாக எழுதி வைக்கப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு, அவைகளை ஒருங்கிணைத்து அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தின் பலன் முழுவதும் உரியவர்களுக்குச் செல்வதற்கான

வழிவகைகளைக் காணும் பொருட்டு வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்திற்கான இணைய தளம் ஒன்றும் தேசிய தகவல் தொடர்பு மையத்தால் ( கீசிசிஙீ://சூசூசூ.சிடூ.கிச்சு.டுடூ/சிடீஙூசிசுஙீஙீசூஸ1 

கீேசிசிஙீ://சூசூசூ.சிடூ.கிச்சு.டுடூ/சிடீஙூசிசுஙீஙீசூஸ2 ) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் மூலம் வன்னியர் அறக்கட்டளைகளுடைய சொத்து விவரங்கள், செயல்பாடுகள் மற்றும் வருமானம் ஆகியவை வன்னியர் பொது சொத்து நலவாரியத்திற்கு தெரிவிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும். இந்த புதிய இணைய தளத்தை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமை அரசுச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச்

செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்