Idhayam Matrimony

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,டிச.1 - மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உதவி தொகையை வழங்கினார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் ரிஷபம், திருமால்நத்தம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ரிஷபத்தில் 48 வீடுகளும், திருமால்நத்தத்தில் 20 வீடுகளும் மழை நீரால் சூழப்பட்டு இருந்ததை பார்வையிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பாதிப்படைந்த வீடுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உதவித்தொகைகளை வழங்கினார். அதன்படி கட்டக்குளம், திருமால்நத்தம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பகுதியளவு பாதிப்படைந்த 7 ஓடு வீடுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1500/ வீதும் ரூ.10,500 /ம் பகுதியளவு பாதிப்படைந்த  2 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.2,500/ வீதம் ரூ.5000/ம் ஆக மொத்தம் ரூ.15,500 மதிப்பிலான உதவித்தொகையைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.செல்லூர் ராஜூ வழங்கினார்.   மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய்,வேஷ்டி, சேலை ஆகிய நிவாரணப் பொருட்களை வழங்கி, பொது மக்களிடமிருந்து மனுக்களையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார். 

இந்த நிகழ்ச்சியின் போது திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேஷ், மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் துரைராஜ், வாடிப்பட்டி வட்டாட்சியர் ருக்மணி, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், வாடிப்பட்டி ஊராட்சி ஓன்றியக் குழுத்தலைவர் அன்னகளஞ்சியம், ரிஷபம் ஊராட்சி மன்றத்தலைவர் மனோன் மணிபழனிப்பன், திருமால்நத்தம் ஊராட்சி மன்றத்தலைவர்பெரியசாமி,வாடிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் துரைநடராஜன், மாவட்ட கவுன்சிலர் செல்லப்பாண்டி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமநாதன்  ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்