முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

இம்பால்,டிச.1 - மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வருவதற்கு முன் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 120 நாட்களாக பொருளாதார தடையை அமுலாக்கி இருந்தனர் நாகா கவுன்சில் அமைப்பினர். இதனால் அந்த மாநிலமே ஸ்தம்பித்து போனது. இந்த தடையை சமீபத்தில் தான் நாகா கவுன்சில் நீக்கியது. இந்த நிலையில் நேற்று காலையில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். நாளை மறுநாள்(3.12.11) பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் மணிப்பூர் செல்கின்றனர். அங்கு அவர்கள் புதிய சட்டசபை கட்டிடம், உயர் நீதிமன்ற வளாகம், உள்ளிட்ட சில கட்டிடங்களை திறந்து வைக்கின்றனர். அவர்கள் வருகைக்கு முன் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மணிப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago