முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வினர் 106 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், டிச.1 - திருமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த தே.மு.தி.க.வினர் 106 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மதுரை அ.தி.மு.க. புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் முரண்பட்ட கொள்கை கோட்பாடுகளால் தே.மு.தி.க. தொண்டர்களும், முக்கிய நிர்வாகிகளும் மனம் நொந்துபோய் உள்ளனர். இந்நிலையில் திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அருகே முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தே.மு.தி.க.வினர் 30 பெண்கள் உட்பட 106 பேர் அக்கட்சியில் இருந்து விலகினர். பின்னர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க.வினர் 106 பேரும் மதுரை அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அனைவருக்கும் முத்துராமலிங்கம் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மதுரை அ.தி.மு.க. புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன், நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன், அவைத் தலைவர் ஜஹாங்கீர், அண்ணா தொழிற்சங்க இன்பம், ஒன்றிய இளைஞரணி நாகையாசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்