முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஆவின் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.1 - பால்வளத்துறை செயல்பாடுகள் குறித்து ஆவின் அதிகாரிகளுடன் சென்னையில் அமைச்சர் மாதவரம் வீ.மூர்த்தி ஆலோசனை நடத்தினார். இதுகுறித்த விபரம் வருமாறு:-  பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் பால்வளத்திட்டங்களின் செயல்பாடுகள்,  கொள்முதல் விலை உயர்வின் அடிப்படையில் பால்பண பட்டுவாடா, கொள்முதலை அதிகரிக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆவின் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் பால்வளத்துறை ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குநர் ம.ரா.மோகன்,  ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கூறியதாவது:-​ தமிழக முதலமைச்சர் எண்ணப்படி,  மீண்டும் ஒரு வெண்மை புரட்சிக்கு தயாராகும் வகையில், தமிழகத்தை பால் உற்பத்தியில் முன்னிலை மாநிலமாக திகழச்செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கூறினார். தமிழக முதலமைச்சர் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில்கொண்டு பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.2/-​ உயர்த்தி ரூ.20/-​ ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.2/-​  உயர்த்தி ரூ.28/-​ ஆகவும் நிர்ணயித்து ஆணை வழங்கியுள்ளார். 

இதனடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு குறித்த நேரத்தில் பால் பணபட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்றும்,  அரசு நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு பால்வளத் திட்டங்களின் பயன்களை, பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் அறியும்வண்ணம் கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள், அவர்களிடம் தெரிவித்து பால் கொள்முதலை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.   நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு,  பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வுக்கூட்டத்தில், பால்வளத் துறை துணை ஆணையர் திரு.எம்.ரவிக்குமார்,  ஆவின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன், பொது மேலாளர் (பணிக்குழு) பி. குமராவேல் பாண்டியன், அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள், துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) மற்றும் ஆவின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்